‘விஸ்வரூபம்-2’ சென்சார் ரிசல்ட்?

Uncategorized சினிமா செய்திகள்

கமல்ஹாசன் இயக்கி நடிக்கும் ‘விஸ்வரூபம்-2’ எப்போது ரிலீசாகும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தரும் செய்தியாக ‘விஸ்வரூபம்-2’வின் சென்சார் காட்சி நேற்று நடைபெற்றது என்றும் படத்தை இப்படத்திற்கு சென்சார் குழு உறுப்பினர்கள் U/A சர்டிஃபிகெட் வழங்கியிருக்கிறார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து இப்படத்தின் டிரைலர் மற்றும் ரிலீஸ் தேதியும் விரைவில் வெளியாகவிருக்கிறது என்றும் அந்த தகவல் தெரிவிக்கிறது. இதனால் ‘விஸ்வரூபம்-2’ தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் நடந்து வரும் ஸ்டிரைக் முடிந்ததும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து ‘‘இந்தியன்-2’வில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார் கமல்ஹாசன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *