நடிகர் சிம்புவால் தனக்கு 20கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது என அன்பானவன் அசரதவன் அடங்காதவன் படத்தின் தயாரிப்பாளர் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
இதுபற்றி ஒரு பிரபல நாளிதழுக்கு சிம்பு பதில்அளித்துள்ளார். “ஒரு படம் நடித்துக் கொண்டிருக்கும் போது, என் மீது அதன் தயாரிப்பாளர் புகார் கூறினார் என்றால் பதில் சொல்கிறேன். படத்தில் நடித்து, வெளியாகி முடிந்துவிட்டது. நான் யாருக்கும் பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. அப்படியொரு சட்டமும் இல்லை,” என சிம்பு கூறியுள்ளார்.