நடிகை பூஜா தத்வாலுக்கு உதவி செய்ய சல்மான்கான் முடிவு

Uncategorized சினிமா செய்திகள்

நோயுற்றிருக்கும் பாலிவுட் நடிகை பூஜா தத்வாலுக்கு போதிய உதவிகளை செய்ய இருப்பதாக, அவருடன் வீர்கதி படத்தில் இணைந்து நடித்த சல்மான் கான் தெரிவித்துள்ளார்.

23 ஆண்டுகளுக்கு முன் வீர்கதி ((Veergati)) திரைப்படத்தில் சல்மான்கானுடன் இணைந்து நடித்த, பூஜா தத்வால் தற்போது காசநோயால் பாதிக்கப்பட்டு, மும்பையில் ஷிவ்தி ((Shivdi)) மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்காக உதவுமாறு சல்மான்கானை அணுக முயன்றதாகவும், ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் பூஜா தத்வால் கூறியிருந்தார். இந்நிலையில், புனேவில் செய்தியாளர்களுடன் பேசிய சல்மானிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது, வீர்கதி திரைப்படத்தில் ஒன்றாக பணியாற்றிய நினைவுகளை பகிர்ந்த சல்மான், தத்வால் தன்னை அணுக முயன்றது தனக்கு தெரியாது என்றார். எனினும், இதுகுறித்து தகவலறிந்ததும், உரிய உதவிகளை செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *