துல்கர் சல்மானின் முதல் தெலுங்கு எக்ஸாம்!

Uncategorized சினிமா செய்திகள்

நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு ‘மகாநதி’ என்ற பெயரில் தெலுங்கில் படமாகியுள்ளது. நாக் அஷ்வின் இயக்கியுள்ள இந்த படம் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரில் தமிழிலும் வெளியாகவிருக்கிறது. இந்த படத்தில் சாவித்திரியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, ஜெமினி கணேசனாக துல்கர் சல்மான் நடித்துள்ளார். துல்கர் சல்மான் நடிக்கும் முதல் தெலுங்கு படம் இது. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து இப்போது டப்பிங் உள்ளிட்ட படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நந்து வருகிறது. இதில் துல்கர் சல்மான் சொந்த குரலிலேயே தெலுங்கு பேசி நடிக்கிரார். இந்நிலையில் முதன் முதலாக தெலுங்கில் டப்பிங் பேசுவது குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் துல்கர் சல்மான் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *