திரையரங்கு ஸ்ட்ரைக்…தீர்வு காண பட அதிபர்கள் மீண்டும் பேச்சுவார்த்தை..!

திரையரங்குகளில் டிஜிட்டல் முறையில் படங்களை திரையிடுவதற்கான சேவை கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கடந்த 1ஆம் தேதி முதல் பட அதிபர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் திரையரங்குகளில் டிக்கெட் விற்பனையை கம்ப்யூட்டர் மயமாக்க வேண்டும் என்றும் பெரிய படங்களுக்கு அதிக கட்டணமும் சிறிய படங்களுக்கு குறைவான கட்டணமும் வசூலிக்க வேண்டும் என்றும் பட அதிபர்கள் வற்புறுத்தி உள்ளனர். மேலும் பார்க்கிங் கட்டணத்தையும் கேன்டீன்களில் விற்கப்படும் உணவு பண்டங்கள் விலையை குறைக்கவும் […]

Continue Reading

புது படத்தில் கமிட் ஆகும் சிம்பு

நடிகர் சிம்பு அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்திற்கு பிறகு தற்போது மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருடன் விஜய் சேதுபதி, ஜோதிகா, அரவிந்தசாமி, அருண்விஜய், ஆகியோர் நடிக்கின்றனர். இதன் படபிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது நடக்கும் ஸ்ட்ரைக் காரணமாக படப்பிடிப்புகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஓய்வில் இருக்கும் சிம்பு இந்த நேரத்தில் ஓவியா நடிப்பில் உருவாக இருக்கும் 99 எம்.எல். படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில், […]

Continue Reading

காதல் கடிதத்தை வெளியிட்ட டாப்ஸி

நடிகை டாப்ஸி ஹிந்தி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த ‘நாம் சபானா’, ‘ஜூத்வா 2’ வெற்றிபெற்று இவருக்கு நடிப்பில் நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது. இந்நிலையில் மீண்டும் தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க கதை கேட்டு வரும் அவருக்கு நிறைய பேர் காதல் கடிதங்கள் அனுப்பி திருமணம் செய்துகொள்ள வற்புறுத்துகிறார்கள். இது குறித்து மனம் திறந்த டாப்சி…”எனக்கு ரசிகர்களிடம் இருந்து காதல் கடிதங்கள் குவிகின்றன. ஒவ்வொரு கடிதத்திலும் அவர்களின் அன்பை பார்க்க முடிகிறது. […]

Continue Reading

சென்னை தமிழை லோக்கலாக பேசும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

டிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது தனுசுடன் வடசென்னை, விக்ரமுடன் துருவநட்சத்திரம், மணிரத்னம் இயக்கத்தில் செக்கச்சிவந்த வானம், அருண்ராஜா காமராஜா இயக்கும் படம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் இடம் பொருள் ஏவல் படம் ரிலீசுக்கு ரெடியாக உள்ள நிலையில் தனது அடுத்தடுத்த படங்களின் கதாபாத்திரத்தை பற்றி பேசுகையில்…”வடசென்னை படத்தில் குப்பத்து பெண்ணாக நடித்திருக்கிறேன். நானும் சென்னைப்பெண். எனவே, சென்னை தமிழ்பேசி நடித்ததில் எந்த கஷ்டமும் தெரியவில்லை. கவுதம்மேனனின் துருவநட்சத்திரம் படத்தில் நடிக்கும் போது, ஆரம்பத்தில் […]

Continue Reading

துல்கர் சல்மானின் முதல் தெலுங்கு எக்ஸாம்!

நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு ‘மகாநதி’ என்ற பெயரில் தெலுங்கில் படமாகியுள்ளது. நாக் அஷ்வின் இயக்கியுள்ள இந்த படம் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரில் தமிழிலும் வெளியாகவிருக்கிறது. இந்த படத்தில் சாவித்திரியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, ஜெமினி கணேசனாக துல்கர் சல்மான் நடித்துள்ளார். துல்கர் சல்மான் நடிக்கும் முதல் தெலுங்கு படம் இது. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து இப்போது டப்பிங் உள்ளிட்ட படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நந்து வருகிறது. இதில் துல்கர் […]

Continue Reading

இயேசு கிறிஸ்துவை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியதாக இளையராஜா மீது புகார்

இயேசு கிறிஸ்துவை கொச்சை படுத்தும் வகையில் பேசியதாக இசையமைப்பாளர் இளையராஜா மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் என்ற அமைப்பின் சார்பில் அளிக்கப்பட்டுள்ள புகாரில் அண்மையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் இளையராஜா இயேசு கிறிஸ்து மறித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தது குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது. இளையராஜா மீது மத உணர்வை புண்படுத்துதல் என்ற அடிப்படையில் வழக்கு பதிவு செய்யக் கோரப்பட்டுள்ளது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்த அமைப்பினர், […]

Continue Reading

துல்கர் சல்மானின் முதல் தெலுங்கு எக்ஸாம்!

நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு ‘மகாநதி’ என்ற பெயரில் தெலுங்கில் படமாகியுள்ளது. நாக் அஷ்வின் இயக்கியுள்ள இந்த படம் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரில் தமிழிலும் வெளியாகவிருக்கிறது. இந்த படத்தில் சாவித்திரியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, ஜெமினி கணேசனாக துல்கர் சல்மான் நடித்துள்ளார். துல்கர் சல்மான் நடிக்கும் முதல் தெலுங்கு படம் இது. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து இப்போது டப்பிங் உள்ளிட்ட படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நந்து வருகிறது. இதில் துல்கர் […]

Continue Reading

கே.வி.ஆனந்துடன் மூன்றாது முறையாக இணையும் சூர்யா!

செல்வராகவன் இயக்கத்தில் ‘NGK’ என்ற படத்தில் நடித்து வரும் சூர்யா, இந்த படம் முடிந்ததும் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் ஏற்கெனவே வெளியாகியிருந்தது. ஆனால் இது குறித்த எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகாத நிலையில் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை இப்போது இயக்குனர் கே.வி.ஆனந்த் வெளியிட்டுள்ளார். சற்றுமுன் கே.வி.ஆனந்த் ட்வீட் செய்திருப்பதில், ‘தனது அடுத்த படம் சூர்யாவுடன் என்றும், இந்த படத்தை ‘லைகா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது என்றும அறிவித்துள்ளதோடு இந்த […]

Continue Reading

‘விஸ்வரூபம்-2’ சென்சார் ரிசல்ட்?

கமல்ஹாசன் இயக்கி நடிக்கும் ‘விஸ்வரூபம்-2’ எப்போது ரிலீசாகும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தரும் செய்தியாக ‘விஸ்வரூபம்-2’வின் சென்சார் காட்சி நேற்று நடைபெற்றது என்றும் படத்தை இப்படத்திற்கு சென்சார் குழு உறுப்பினர்கள் U/A சர்டிஃபிகெட் வழங்கியிருக்கிறார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து இப்படத்தின் டிரைலர் மற்றும் ரிலீஸ் தேதியும் விரைவில் வெளியாகவிருக்கிறது என்றும் அந்த தகவல் தெரிவிக்கிறது. இதனால் ‘விஸ்வரூபம்-2’ தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் நடந்து வரும் ஸ்டிரைக் முடிந்ததும் வெளியாகும் […]

Continue Reading

நடிகை பூஜா தத்வாலுக்கு உதவி செய்ய சல்மான்கான் முடிவு

நோயுற்றிருக்கும் பாலிவுட் நடிகை பூஜா தத்வாலுக்கு போதிய உதவிகளை செய்ய இருப்பதாக, அவருடன் வீர்கதி படத்தில் இணைந்து நடித்த சல்மான் கான் தெரிவித்துள்ளார். 23 ஆண்டுகளுக்கு முன் வீர்கதி ((Veergati)) திரைப்படத்தில் சல்மான்கானுடன் இணைந்து நடித்த, பூஜா தத்வால் தற்போது காசநோயால் பாதிக்கப்பட்டு, மும்பையில் ஷிவ்தி ((Shivdi)) மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்காக உதவுமாறு சல்மான்கானை அணுக முயன்றதாகவும், ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் பூஜா தத்வால் கூறியிருந்தார். இந்நிலையில், புனேவில் செய்தியாளர்களுடன் பேசிய சல்மானிடம் […]

Continue Reading