பரத்துடன் இணையும் மலையாள நடிகை..!

லீப்பிங் ஹார்ஸ், இன்கிரடிபுள் புரொடக்சன்ஸ் மற்றும் தீனா ஸ்டூடியோஸ் சார்பில் தினகரன், M.S.சிவநேசன் தயாரித்து வரும் திரைப்படம் ‘காளிதாஸ்’. பரத், அன் ஷீத்தல், ஆதவ் கண்ணதாசன், சுரேஷ் மேனன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார். புவன் சீனிவாசன் படத் தொகுப்பை கவனிக்கிறார். திரைக்கதை எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார் ஸ்ரீசெந்தில். இவர் நாளைய இயக்குநர் சீசன் – 3 இல் கலந்து கொண்டு இறுதி போட்டி வரை […]

Continue Reading

விவேகம் யோகி B யுடன் இணைந்த புதிய இசையமைப்பாளர் கணேஷ் சந்திரசேகரன்..

அன்பு மயில்சாமி நடித்துள்ள திரிபுரம் , தயாரிப்பாளர் R.K. சுரேஷ் நடித்துள்ள வேட்டைநாய் போன்ற படங்களில் இசையமைத்த இசையமைப்பாளர் கணேஷ் சந்திரசேகரன் இவர் தற்போது விவேக், தேவையானி ஜோடியாக நடித்துள்ள எழுமின் படத்தில் இசையமைத்துள்ளார் சிறுவர்களின் தற்காப்பு கலையை மையமாக வைத்து உருவாக்கபட்டுள்ள இந்த படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது, இதில் விவேகம், டிக் டிக் டிக் , காலா போன்ற படங்களில் பாடல் பாடிய RAP SINGER யோகி B, கணேஷ் சந்திரசேகரனின் இசையில் பா.விஜய் […]

Continue Reading

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாறு படமாகிறது

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்க இருக்கின்றனர். இலங்கையில் தமிழ் ஈழம் அமையப் பாடுபட்டவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன். கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கை அரசால் இவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில், இவருடைய வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்க இருக்கின்றனர். ‘நீலம்’, ‘உனக்குள் நான்’, ‘லைட் மேன்’ ஆகிய படங்களை இயக்கிய ஜி.வெங்கடேஷ் குமார் இந்தப் படத்தை இயக்குகிறார். தன்னுடைய ஸ்டுடியோ 18 நிறுவனத்தின் மூலம் வெங்கடேஷ் குமாரே […]

Continue Reading

பிரபல தொகுப்பாளினி திடீர் தற்கொலை- அதிர்ச்சியில் பிரபலங்கள்

சினிமா நடிகைகளை தாண்டி ரசிகர்கள் அதிகம் விரும்புவது தொலைக்காட்சி நடிகைகளை என்று கூறலாம். அப்படி தொலைக்காட்சி பிரபலங்களுக்கு ஏதாவது நடந்தால் அதை கேட்டு ரசிகர்கள் வருத்தப்படுவர். அப்படி தெலுங்கு சினிமாவில் பிரபல தொகுப்பாளினி ராதிகா ரெட்டி ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 1) நேற்று 5வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார். அதோடு தான் இறப்பதற்கு என்ன காரணம் என்றும் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில் அவர், மன அழுத்தம் காரணமாக நான் என்னை கொலை செய்கிறேன், யாரும் […]

Continue Reading

விக்ரம் ஜோடியாக நடிக்கிறார் அக்‌ஷரா ஹாசன்

கமல்ஹாசனிடம் கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் உதவியாளராகப் பணியாற்றிய ராஜேஷ் எம் செல்வா, ‘தூங்காவனம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இவர் தற்போது தன்னுடைய இரண்டாவது படத்தை இயக்க உள்ளார். இந்தப் படத்தில் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இதில், விக்ரம் ஜோடியாக கமலின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன் நடிக்கிறார். அக்‌ஷரா, ஏற்கெனவே அஜித்தின் ‘விவேகம்’ படத்தில் நடித்துள்ளார். வேலை நிறுத்தம் முடிந்தபிறகு இந்தப் படத்தின் ஷூட்டிங் […]

Continue Reading

மலையாளத்தில் அறிமுகமாகும் அனுஷ்கா!

சமீபத்தில் வெளியான ‘ஹே ஜூட்’ படத்தின்மூலம், த்ரிஷா மலையாளத் திரையுலகில் அறிமுகமாகி, அந்தப் படம் 50 நாள்களைக் கடந்து கேரளா, தமிழ்நாடு ஆகிய இடங்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இவரைத் தொடர்ந்து, தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக நடித்துவரும் அனுஷ்கா, தற்போது மலையாளப் படத்தில் அறிமுகமாக இருக்கிறார். அறிமுக இயக்குநர் ஷரத் சந்தித், மம்மூட்டியை வைத்து ‘பரோல்’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். அந்தப் படம், வரும் 5-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இதைத் தொடர்ந்து, […]

Continue Reading

திரையரங்கு ஸ்ட்ரைக்…தீர்வு காண பட அதிபர்கள் மீண்டும் பேச்சுவார்த்தை..!

திரையரங்குகளில் டிஜிட்டல் முறையில் படங்களை திரையிடுவதற்கான சேவை கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கடந்த 1ஆம் தேதி முதல் பட அதிபர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் திரையரங்குகளில் டிக்கெட் விற்பனையை கம்ப்யூட்டர் மயமாக்க வேண்டும் என்றும் பெரிய படங்களுக்கு அதிக கட்டணமும் சிறிய படங்களுக்கு குறைவான கட்டணமும் வசூலிக்க வேண்டும் என்றும் பட அதிபர்கள் வற்புறுத்தி உள்ளனர். மேலும் பார்க்கிங் கட்டணத்தையும் கேன்டீன்களில் விற்கப்படும் உணவு பண்டங்கள் விலையை குறைக்கவும் […]

Continue Reading

புது படத்தில் கமிட் ஆகும் சிம்பு

நடிகர் சிம்பு அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்திற்கு பிறகு தற்போது மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருடன் விஜய் சேதுபதி, ஜோதிகா, அரவிந்தசாமி, அருண்விஜய், ஆகியோர் நடிக்கின்றனர். இதன் படபிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது நடக்கும் ஸ்ட்ரைக் காரணமாக படப்பிடிப்புகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஓய்வில் இருக்கும் சிம்பு இந்த நேரத்தில் ஓவியா நடிப்பில் உருவாக இருக்கும் 99 எம்.எல். படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில், […]

Continue Reading

காதல் கடிதத்தை வெளியிட்ட டாப்ஸி

நடிகை டாப்ஸி ஹிந்தி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த ‘நாம் சபானா’, ‘ஜூத்வா 2’ வெற்றிபெற்று இவருக்கு நடிப்பில் நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது. இந்நிலையில் மீண்டும் தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க கதை கேட்டு வரும் அவருக்கு நிறைய பேர் காதல் கடிதங்கள் அனுப்பி திருமணம் செய்துகொள்ள வற்புறுத்துகிறார்கள். இது குறித்து மனம் திறந்த டாப்சி…”எனக்கு ரசிகர்களிடம் இருந்து காதல் கடிதங்கள் குவிகின்றன. ஒவ்வொரு கடிதத்திலும் அவர்களின் அன்பை பார்க்க முடிகிறது. […]

Continue Reading

சென்னை தமிழை லோக்கலாக பேசும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

டிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது தனுசுடன் வடசென்னை, விக்ரமுடன் துருவநட்சத்திரம், மணிரத்னம் இயக்கத்தில் செக்கச்சிவந்த வானம், அருண்ராஜா காமராஜா இயக்கும் படம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் இடம் பொருள் ஏவல் படம் ரிலீசுக்கு ரெடியாக உள்ள நிலையில் தனது அடுத்தடுத்த படங்களின் கதாபாத்திரத்தை பற்றி பேசுகையில்…”வடசென்னை படத்தில் குப்பத்து பெண்ணாக நடித்திருக்கிறேன். நானும் சென்னைப்பெண். எனவே, சென்னை தமிழ்பேசி நடித்ததில் எந்த கஷ்டமும் தெரியவில்லை. கவுதம்மேனனின் துருவநட்சத்திரம் படத்தில் நடிக்கும் போது, ஆரம்பத்தில் […]

Continue Reading