சமீபத்தில் வெளியான ‘ஹே ஜூட்’ படத்தின்மூலம், த்ரிஷா மலையாளத் திரையுலகில் அறிமுகமாகி, அந்தப் படம் 50 நாள்களைக் கடந்து கேரளா, தமிழ்நாடு ஆகிய இடங்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இவரைத் தொடர்ந்து, தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக நடித்துவரும் அனுஷ்கா, தற்போது மலையாளப் படத்தில் அறிமுகமாக இருக்கிறார்.
அறிமுக இயக்குநர் ஷரத் சந்தித், மம்மூட்டியை வைத்து ‘பரோல்’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். அந்தப் படம், வரும் 5-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இதைத் தொடர்ந்து, அவர் இயக்கவிருக்கும் அடுத்த படத்திலும் மம்மூட்டி கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இவரின் நடிப்பில் வெளியான ‘அருந்ததி’, ‘பாகுபலி’ ஆகிய படங்கள் மூலமாக கேரளாவில் ஏராளமான ரசிகர்களைக் கொண்டுள்ளார். இந்நிலையில், நேரடி மலையாளப் படத்தில் அறிமுகமாவதால், அனுஷ்காவும் அவரது ரசிகர்களும் சந்தோஷத்தில் இருக்கின்றனர்.